மூன்று ஆண்டுகளில் நடக்கலாம். !!



பூமியில் நடந்தே செல்லக்கூடிய நீண்ட பாதை ஒன்றை கூகிள் மேப்ஸ் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள அகுல்ஹாஸ் முனையில் தொடங்கி, வடகிழக்கில் ரஷ்யாவில் உள்ள மகதான் நகரம் வரையிலான பாதைதான் அது. இதன் நீளம் 14,334 மைல். இந்தத் தொலைவுக்குள் நதிகள் ஓடினாலும் அவற்றைப் படகுகளில் கடக்க வேண்டியதில்லை. பாலங்கள் வழியாக நடந்தே கடக்கலாம்.




சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் இந்த தொலைவை நடந்து கடப்பது மிகவும் கடினம். ஏனெனில், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், இயற்கை இன்னல்கள், போரால் சின்னாபின்னமாகியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் போன்ற காரணங்கள் இந்தப் பாதையை நடந்து கடப்பதைக் கடினமாக்குகின்றன. குறிப்பாக, சஹாரா பாலைவனத்தின் வெப்பம் ஒரு துருவம் என்றால், அதற்கு நேரெதிராக இருக்கிறது. ரஷ்யாவில்  நிலவும் அதிக குளிர். இதையெல்லாம் தாக்குப்பிடிக்கும் ஆடைகள், பிற சாதனங்களை சுமந்து செல்ல வேண்டும். ஓய்வு எடுக்காமல் நடந்தால், இந்தத் தொலைவைச் சுமார் 200 நாட்களில்  கடந்துவிடலாம். ஓய்வெடுத்து மிதமான வேகத்தில் நடந்தால் மூன்று ஆண்டுகள் ஆகும். என்ன நடந்து பார்க்கலாமா ?!   


அன்புடன்: டெக் ஜைனுல்.


Follow Us On: <எங்களைப் பின்தொடரவும்.>