பெரியார் திராவிடர் கழகம் வெளியிடும் உண்மை இதழ் மாதத்திற்கு இரு முறை வெளியாகிறது. இதில் 2020 ஜனவரி 16 - 31 “உண்மை” இதழ் முதல் ஒவ்வொரு “ உண்மை ” இதழிலும் ஒரு பரிசுக் கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுக்கு தேர்வு செய்யப்படும் கட்டுரைக்கு ரூ.10,000 ( பத்தாயிரம் ) பரிசு.
Follow Us On Facebook: http://bit.ly/35DJJ9Z


போட்டியின் விதிமுறைகள்:
ஜனவரி 16-31 உண்மை இதழுக்கான கட்டுரைப் போட்டி.
தலைப்பு :மூடநம்பிக்கையால் வரும் கேடுகள் !
கட்டுரை A-4 தாளில் 10 பக்கம் அளவில் ( 300 வரிகள் ) எழுத்துரு ஒருங்குறி ( UNICODE ) வடிவில் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கப்படவேண்டும்.
பரிசுக் கட்டுரைத் தேர்வில் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது. கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகள் அனுப்புவோர்  உண்மை இதழின் சந்தாதாரராக இருக்க வேண்டும்.
 சந்தாதாரர் அல்லாதாதவர்கள் , உண்மை ஆண்டு சந்தா ரூ. 350/- க்கு “ UNMAI “ என்ற பெயருக்கு டி.டி ( Demand Draft ) எடுத்து கட்டுரையுடன் இணைத்து அனுப்பவும். 
சந்தாதாரராக இருப்பவர்கள் சந்தா எண்ணை கட்டுரையின் இறுதியில் குறித்து அனுப்பவும்.

குறிப்பு:

கட்டுரை ஆழமாகவும், பொருள் செறிந்ததாகவும், புதிய தரவுகள், சிந்தனைகள் கொண்டதாகவும் ஒவ்வொரு வரியும் ஊன்றி, ஆய்ந்து, உணர்ந்து, தேர்ந்து உருவாக்கப்படுதல் வேண்டும்.

பரிசுக் கட்டுரைகள் எதிர்காலத்தில் நூல் வடிவமும் பெற வாய்ப்புண்டு என்பதை கருத்தில் கொண்டு பொறுப்போடு படைத்தனுப்புங்கள் !!





அனுப்ப வேண்டிய முகவரி:

உண்மை
பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை - 7, 044-26618162
ஈமெயில் : unmailayout@gmail.com


அன்புடன்:  டெக் ஜைனுல்.


Follow Us On: <எங்களைப் பின்தொடரவும்.>