காலை வேளை மாநகரின் சாலையோரவாசியான அந்தப் பெண் தன் குடும்பத்துக்கான மதிய உணவை தயார் செய்ய ஆயத்தமாகிறாள். காலை வெயில் அவர்களது வசிப்பிடத்தில் விழுகிறது. அவளது குழந்தை நிர்வாணமாக நின்று, சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. அந்தப் பெண் அன்றைய சமையலுக்கான பொருட்களை எடுக்கிறாள். அது அன்றைய தினத்துக்கு போதுமானதாக இல்லை. இது பொதுவாக நாம் இந்திய சாலைகளில் பார்க்கும் காட்சி. இரவில் பூட்டிடப்பட்ட கடையின் வாசலை அன்றைய தின தூக்கத்திற்கு தயார் செய்யும் நபர் என சாலையோரவாசிகளின் வாழ்க்கை நிலை எல்லா காலத்திலும் ஏறத்தாழ இவ்வாறே உள்ளது.
![]() |
| Follow Us On: " https://www.facebook.com/techjainul/ " |
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அபாயம் என்னவென்றால் தங்குவதற்கு ஏதேனும் வீடு இருப்பவர்கள் கூட மிகவும் மோசமான வறுமை சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதே.
( absolute poverty ) மற்றும் “ ஒப்பிட்டு வறுமை “ ( relative poverty ) “ அப்பட்டமான வறுமை “ என்பது எந்த அடிப்படை வசதிகளையும் பெற முடியாத நிலையைக் குறிப்பது. குறிப்பாக வீடற்று சாலை ஓரத்தில் வசிப்பவர்களை இந்தப் பிரிவின் கீழ் சேர்க்க முடியும், அதே போல்
“ ஓப்பிட்டு வறுமை “ என்பது பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்பவர்களைக் குறிக்கக் கூடியது. இவர்களால் அடிப்படைத் தேவைகளை குறைந்த அளவிலேனும் பெற முடியும். ஆனால், சமூக அமைப்பில் பிறருடன் ஒப்பிடுகையில் இவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கியதாக இருக்கும். இப்போது இந்தியா எதிர்கொண்டிருக்கும் சிக்கல் என்னவென்றால், ஒப்பிட்டு வறுமையில் இருப்பவர்கள், அப்பட்டமான வறுமையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதுதான்.
வறுமைசூழ் இந்தியா:
இந்தியாவின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று, சமத்துவமின்மை, பொருளாதார ரீதியாகவும், வாழ்வுரிமை ரீதியாகவும் இந்தியா கடும் ஏற்றத்தாழ்வை கொண்ட நாடாக உள்ளது . மக்கள் தொகையில், உயர் வர்க்கத்தில் உள்ள 10 சதவீத பிரிவினரிடமே 80 சதவீத சொத்துக்கள் இருக்கின்றன. இதுவே இந்தியாவை மீள முடியாத சூழலுக்குள் தள்ளியுள்ளது. இவை தலைமுறை தலைமுறையாக மக்களை வறுமையில் ஆழ்த்தச் செய்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரையில் தனி நபரின் “ நுகர்வு திறன் “ அடிப்படையில் வறுமைக்கோடு கணக்கிடப்படுகிறது. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 32 ரூபாயும் நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் செலவிட முடியாத சூழலில் இருக்கும் நபர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவராக அடையாளப்படுத்தப்படுகிறார். இது 2012-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ரங்கராஜன் குழுவின் அளவீடு. அதன்படி 2011-12-ன் இந்தியா முழுமைக்குமாக 29.5 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். இந்திய மக்களில் ஐந்து பேர்களில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கீழ் வாழ்கிறார். சமீபத்தில் தேசியபுள்ளிவிவரங்கள் அலுவலகத்தின் அறிக்கை ஒன்று வெளியே கசிந்தது. அதில் மக்களின் நுகர்வு திறன் 2011-12-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18-ல் 3.7 சதவீதம் அளவில் சரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறத்தில் நுகர்வுத்திறன் 10 சதவீதம் சரிந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நுகர்வுத்திறன் என்பது ஒரு தனி நபர் தனது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு அவரிடம் பணப்புழக்கம் இருப்பதை குறிப்பது.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மூன்று காரணிகள் மிக முக்கியமானவை. தனிநபர் நுகர்வு, முதலீடு மற்றும் ஏற்றுமதி தற்போது இந்த மூன்றும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. மக்களின் நுகர்வு திறன் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிந்துள்ளது என்பதே சமீபத்திய அச்சுறுத்தலான செய்தி.
மக்கள் நுகர்வு திறன் குறைவது என்பது. அந்த நாட்டில் வறுமை அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறி. போதிய வருவாய் ஈட்ட முடியாத நிலையிலே மக்களின் நுகர்வுத்திறன் பாதிக்கப்படுகிறது.
இங்கு நாம் இரண்டு காரணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று தனிநபர் வருவாய்; மற்றொன்று விலைவாசி. தற்போதுள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால் தனி நபர் வருவாய் 7 ஆண்டுகளுக்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் தான் தற்போதும் இருக்கிறது.குறிப்பிடும்படியாக மேம்படவில்லை. ஆனால் விலைவாசியோ இருமடங்காகிவிட்டது.
வேலையில்லா இந்தியா:
வேலை என்பது வருவாயுடன் மட்டும் தொடர்புடையது அல்ல; அது ஒரு நபருக்கு சமூகம் சார்ந்து சில பொறுப்புக்களையும் அளிக்கிறது.வேலையில்லாமல் வறுமையில் வாழும் ஒருவர் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளது.கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையின்மை உயர்ந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி இளைங்கர்களிடையே வேலையின்மை அதிகரித்து இருக்கிறது. வட மாநிலங்களில் வேலையின்மையால் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தனிநபர் வருமானம் ஒரு வேளை உணவுக்கே போதுமானதாக இல்லை. இந்த நிலையில் தன் மக்களை வைத்துக் கொண்டுதான். பொருளாதார ரீதியாக உலகில் 6-வது பெரிய நாடு என இந்தியா பெருமிதம் கொள்கிறது.
அன்புடன்: டெக் ஜைனுல்.


0 Comments