“ இந்து தமிழ் “ நடத்தும் அறிவியல் திருவிழா 2020. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி.
![]() |
| நன்றி: “ இந்து தமிழ் திசை “ |
போட்டியின் விதிமுறைகள்:
6,7,8 ஆகிய மூன்று வகுப்புகளில் இருந்தும் தலா ஒருவர் வீதம் ஒரு குழுவில் மூவர் இருக்க வேண்டும்.
· ஒரு பள்ளியில் இருந்து எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
· ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ. 300 செலுத்த வேண்டும். (( இந்த தொகை திருப்பி தர மாட்டாது. ))
· ஒரு குழுவில் உள்ள மூவரும் ஒரே பள்ளியின் வேறு வேறு கிளைகளைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது.
· (( அரசு பள்ளிகளுக்கு கட்டணம் கிடையாது. ))
· ஆன்லைனில் பதிவு செய்யும் போது குழுவிலுள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு மூன்றிலக்க பதிவு எண்.அவர்களது செல்பேசிக்கு SMS ஆக வரும் . இந்த மூன்றிலக்க எண்ணைப் போட்டி நடைபெறும் நாளின் போது குறித்துக்கொண்டு வரவும்.
· போட்டி நடைபெறும் இரு நாளைக்கு முன்னரே ஆன்லைன் பதிவு முடிவுக்கு வரும்.
· போட்டி நடைபெறும் நாளில், காலை 8:30 மணிக்குள் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். போட்டியின்போது அவசியம் பள்ளியின் அடையாள அட்டையை மாணவர்கள் கொண்டு வர வேண்டும். போட்டிக்கான கேள்விகள் அறிவியல் தொடர்பானவை. நிகழ்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.
· மாதிரி வினாக்களுக்கு “ இந்து தமிழ் திசை “ நாளிதழின் “ மாயா பஜார் ” இணைப்பிதழைப் பாருங்கள்.


0 Comments