இன்று அனைவருக்கும் தேவைப்படும் அறிய மருத்துவக் குறிப்புக்கள். !!
![]() |
Follow Us On Facebook: http://bit.ly/35DJJ9Z
மாணவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிக்க….
வல்லாரை, வில்வ இலை இரண்டையும் சம அளவு எடுத்து, நன்றாக சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, பொடி செய்யவும். இதை 5 கிராம் வீதம் 50 மில்லி பசும் பாலில் கலந்து, காலை, மாலை என இரு வேளையும் உண்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தினமும் 5 வல்லாரை இலைகள் எடுத்து, அதனுடன் ஒரு மிளகை சேர்த்து நன்றாக மென்று தின்று வந்தாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தகுந்த வயது வந்தும் பருவம் அடையாத பெண்களுக்கு…
வேலிப்பருத்தி இலைகள் 10, அதனுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஏழு நாள்கள் விழுங்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், பருவம் அடையாத பெண் பருவமடைவாள்.
ஹோமியோபதி மருத்துவத்தில் “பல்சடில்லா” என்னும் மருந்து உள்ளது. இந்த மருந்தை இரண்டு வாரங்கள் எடுத்துக் கொண்டாலும் பெண் பருவமடைவது நிச்சயம். ஹோமியோபதி மருத்துவரை அணுகி, அவரிடம் இந்த மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
சிறுநீரகக் கற்கள் கரையணுமா ?
RO மற்றும் மினரல் வாட்டர் பருகுவதினால் இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினை இது. !!
தொட்டாஞ்சிணுங்கி இலைகள், காய்களை சிறிதளவு பறித்து, அப்படியே அதை பச்சையாக உண்டால் சிறுநீராகக் கற்கள் கரைந்து வெளியேறும்.
வாழைதண்டுச் சாறும் தினமும் காலையில் அருந்தலாம். வாழைத்தண்டில் கூட்டு, பொரியல், சாலட் என்று செய்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் “சிஸ்டோன்” எனும் மாத்திரையால் சிறுநீரகக் கற்கள் சீக்கிரம் கரையும். தவிர, வாழைத்தண்டை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகாது.
ரத்த அழுத்தம் குணமாக….
நன்னாரி வேரை நீர்விட்டுக் கொதிக்க வைத்து, ‘டிக்காஷன் ’ தயாரிக்கவும். இதை பால், சர்க்கரையுடன் சேர்த்து காலை, மாலையில் தேநீர், காபி இவற்றுக்கு பதிலாக அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் படிப்படியாகக் குறையும்.
5 அல்லது 6 பூண்டுப் பற்களை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்றாகக் காய்ச்சி, பூண்டுப் பற்களைச் சாப்பிட்டு விட்டு, அந்தப் பாலை தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தாலும் ரத்த அழுத்தம் விரைவில் குறையும்.
முருங்கை இலைச் சாற்றை தினமும் காலையில் 10 மில்லி வீதம் குடித்து வந்தாலும் ரத்த அழுத்தம் குணமாகும். தினமும் உணவில் வெங்காயம், பூண்டு, அவரைக்காய், முருங்கைக் கீரை ஆகியவற்றை
சேர்த்துக் கொண்டால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
நீரிழிவு நோய் கட்டுப்பட வேண்டுமா ?
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பாகற்காய் சாறுடன் சம அளவு வெந்தயப் பொடி சேர்த்து உண்டு வரலாம். இதனால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
சிந்தில் கொடி இலை, வேப்பிலை, ஆவாரம் பூ, கோவைக்காய், வல்லாரை, சிறுகுறிஞ்சான் இலை, இன்சுலின் இலை உள்ளிட்டவையும் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக நார்சத்துள்ள உணவுகளை தினசரி உட் கொள்ள வேண்டும்.
உணவை ஒரே வேளையில் அதிகமாக உண்ணாமல், சீரான இடவெளியில் பிரித்துப் பிரித்து உண்ண வேண்டும். கீரைகள், முளைவிட்ட தானியங்கள், பருப்புகள், ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சர்க்கரை நோய், கட்டுக்குள் இருக்கும்.
அன்புடன்: டெக் ஜைனுல்.Follow Us On: <எங்களைப் பின்தொடரவும்.>❤️Twitter: https://twitter.com/TechJainul |


0 Comments