இது பொருளாதாரத்தைப் பற்றிய அடிப்படை பதிவு.
![]() |
| Follow Us On Facebook: http://bit.ly/35DJJ9Z
முழுவதும் படிக்கவும் அப்பொழுதான் புரியும். முதலில் பொருளாதாரம் என்றால் என்ன ? பொருள் + ஆதாரம் = பொருளுக்கு ஆதாரமாக இருப்பது பூமியின் வளங்கள். பூமியின் வளங்கள் பல்வேறு பொருளாக உருமாற்றுவது மனித உழைப்பு.
அதாவது மனிதனுடைய தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமான தொழில்கள் தோன்றின. வியாபாரத்திற்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசம். வியாபாரம் என்பது சமூகத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை பூர்த்தி செய்து தன்னுடைய தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வது. ஆனால் சிலர் கூறுவார்கள் வியாபாரத்தில் வருமானம் கிடைப்பது ஒரு காலம் மட்டுமே என்பார்கள் ஆம் உண்மை தான் லாபமே நோக்கமாக கொண்டு தொழில் செய்பவர்களுக்கு மட்டும் இது பொருந்தும். ஆனால் சேவை நோக்கத்தில் அழகிய முறையில் வியாபாரம் செய்பவர்களுக்கு எந்நாளும் பொன் நாளே.
ஆனால் வட்டி அப்படியல்ல ஒருவருக்கு நீங்கள் வட்டிக்கு பணம் கொடுக்கிறீர்கள் எனில் அவரின் உழைப்பை சுரண்டுகிறீர்கள் மேலும் அவர் அந்த தொகையை திருப்பிக் கொடுக்கும் போது உங்களை சபிக்கிறார். மற்றொன்று அவர் அந்த வட்டியை ஈடு கட்ட அதிக லாபம் சம்பாரிக்கும் நோக்கத்தில் தன்னுடைய வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தரமற்ற பொருட்களை அதிக லாபத்திற்கு விற்கிறார். உதாரணமாக ஒரு மருத்துவருக்கு நீங்கள் வட்டிக்கு கடன் கொடுக்கீறீர்கள் என்றால் அவர் அந்த வட்டித் தொகையை ஈடு கட்டுவதற்கு நோயாளிகளை ஒரு வியாபார பண்டமாக பார்க்கிறார் அதனால் இல்லாத நோய்க்கு மருந்தை விற்பனை செய்கிறார். இப்படி சமூகத்தின் அனைத்து துறைகளையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் இந்த வட்டி சங்கிலியில் பங்கு கொள்ளாதவர்கள் என மொத்த சமூகமே பாதிக்கப்படுகிறது.
உதாரணமாக வியாபாரம் என்பது திருமணத்திற்கு ( ஒப்பந்தம் ) சமம். இறுதி வரை தன்னுடைய வாடிக்கையாளர்களை சார்ந்திருந்தே ஆக வேண்டும். அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.
ஆனால் வட்டித் தொழில் என்பது விபச்சாரம் செய்வதிற்கு சமம். ஒரு விபச்சாரி எப்படி தன்னுடைய வாடிக்கையாளர்களை அணுகி பணம் பெருவாளோ அது போல வட்டித் தொழில் செய்பவர்கள் பணஅரிப்பெடுத்து மேலும் மேலும் அந்தப் வட்டிப் பணத்தை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். இதை தெளிவாக நான் விளக்க விரும்பவில்லை புரிபவர்களுக்கு புரியும். இறுதியில் விபச்சாரியின் முடிவு எவ்வளவு மோசமாக இருக்குமோ ? அது போல தான் வட்டியால் பெருகிய செல்வத்தின் நிலையும் .
நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் . ஒரு பொருள் நமக்கு அவசியமா ? தேவையா ? இல்லையா ? என்பதை அறிந்து பொருளாதாரத்தை பக்குவத்தோடு செலவு செய்வோம் . மற்றவர் நம்மை பெருமை பேச வேண்டும் என்பதற்காக செலவு செய்யாமல் நமக்கு என்ன வேண்டுமோ அதற்க்கு பக்குவமாக செலவு செய்தல் இந்த “ வட்டி தொழில் செய்யும் பன்றிகளை பெறுகவிடாமல் தடுக்கலாம். வட்டி வாங்கவில்லை என்றால் வட்டித் தொழில் அழியும் அதானே உண்மை. பிறகு வட்டிக்கு பணம் வாங்காமல் ( முதலீடு ) இல்லாமல் என்னுடைய தொழிலை விரிவுபடுத்துவது எப்படி என்று கூறுபவர்களுக்கு ஒரே பதில் “ இன்று உலகின் மிகப் பெரும் நிறுவனங்கள் அனைத்தும் “ 0” ZERO முதலீட்டில் தொடங்கப்பட்டவைதான். ( அமேசான் , உபேர் , பேஸ்புக் )
புற்றுநோய் எப்படி உடல் முழுவதும் பரவி உயிரைக் கொல்லுமோ. அது போல “ வட்டி “ சமூகத்தை அழித்துவிடும். ஆனால் இன்று நாகரிகம் என்ற பெயரில் “ சந்தைப் பொருளாதாரம்” வந்த பிறகு அனைத்திலும் புகுந்து விட்டது. இந்த “ காகிதப் பணம் “ கூடவே அதன் கள்ளக் குழந்தையாக வந்தது தான் இந்த “ வட்டி ”.
பொருளாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு பதிவு தொடரும் ….
அன்புடன்: டெக் ஜைனுல். Follow Us On: <எங்களைப் பின்தொடரவும்.>
❤️Facebook Page: https://www.facebook.com/techjainul/
|


0 Comments