விசிட்டிங் விசாவில் துபாய்க்கு வேலை தேடி போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
![]() |
| Follow Us On FB: https://www.facebook.com/techjainul/
நண்பர்களே, இது என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து எழுதுகிறேன் இதில் எதும் குறை இருந்தால் என்னுடைய மெயில் ஐடிக்கு உங்களது கருத்துக்களை தாராளமாக அனுப்பலாம்.
முதலில் நாம் விசிட்டிங் விசாவில் வேலை தேடிச் செல்லப் போகிறோம். என்றால் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய நோக்கம் ஒன்றே. நம் கல்வி தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலையைத் தேடிப் பெறுவது அதை விடுத்து எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காதீர்கள்.
பொதுவாக இன்றைய போட்டி மிக்க உலகில் மேலும் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவும் சமயத்தில் நாம் வேலை தேடி செல்வதால் கிடைக்கும் சம்பளத்தில் வேலை செய்து கொண்டு நம்முடைய இதர துறை சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது நம்முடைய புத்திசாலித்தனம்.உலகம் என்றால் மனிதர்கள் இருப்பார்கள் மனிதர்கள் இருக்கும் வரை பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினைகள் இருக்கும் வரை வேலைவாய்ப்புக்கு பிரச்சினையே இல்லை. ஆகவே கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களை முதலில் சந்தைப்படுத்தக் ( Market Yourself ) கற்றுக் கொள்ளுங்கள். உதவும் எண்ணம் கொண்டவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர் ஆகவே பயப்படாமல் யாரிடமும் உங்கள் சந்தேகங்களை கேட்கலாம். உங்கள் நோக்கத்தை உலகம் அறியட்டும்.
நம்முடைய நோக்கமும் திட்டமிடலும் சரியாக இருந்தால் நமக்கு வேலை நிச்சயம். நாம் விசிட்டிங் விசாவில் செல்லும் முன் ஒரு செக் லிஸ்ட் ( குறிப்பு அட்டை) எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு தேவையான அனைத்து பொருள்களையும் இங்கிருந்தே நாம் கொண்டு செல்வது நமது செலவைக் குறைக்கும்.
செக் லிஸ்ட் ( குறிப்பு அட்டை ) மூன்று பகுதியாக பிரித்துக் கொள்ளுங்கள்.
விமான நிலையம் ( Airport ) :
Passport ( கடவுச் சீட்டு )
Visa Copy ( விசா நகல் )
Flight Ticket With Return Ticket
( விமான பயணசீட்டு மேலும் மறுவருகை பயண சீட்டு )
Aadhar Card ( ஆதார் அட்டை )
குறிப்பு: பன்னாட்டு ( International ) விமான பயணம் செய்பவர்கள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தில் இருக்க வேண்டும். பின்பு நீங்கள் எந்த விமானத்தில் பயணம் செய்ய போகிறீர்களோ அதன் கவுண்டரில் சென்று டிக்கெட் காப்பியை கொடுத்து உங்களது போர்டிங் பாஸ்சை பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு உங்களது லக்கேஜ்ஜை சோதனை செய்வார்கள் அதாவது லக்கேஜ்ஜை பொறுத்தவரையில் ( Hand Luggage ) 7 KG அளவு எடுத்துச் செல்லலாம். ( Other ) 30 Kg அளவு எடுத்துச் செல்லலாம். இந்த அளவு என்பது விமான நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். கையில் எடுத்துச் செல்லும் பொருள்களில் கத்தி, தீப்பற்றும் பொருள்கள் மற்றும் சில தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்து செல்ல வேண்டாம். இம்மிகிரேஷன் ( குடிபுகல் ) சோதனையின் போது உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு, போன்ற சில ஆவணங்களை சோதிப்பார்கள் பின்பு சில கேள்விகளை கேட்பார்கள் அதற்க்கு தெளிவாக பதில் சொன்னால் போதும் உங்களுக்கு அனுமதி கிடைத்துவிடும்.
தங்கும் இடம் ( Room ) :
குறிப்பு: உங்கள் செலவைக் குறைக்க வேண்டும் எனில் முன்னரே திட்டமிட்டு உங்களுக்கு தேவையான பொருள்களை இங்கிருந்தே கொண்டு செல்வது நல்லது.
UAE Money ( துபாய் நாட்டு பணம் )
Sim Card ( சிம் கார்டு )
Tooth Brush ( டூத் பிரஷ் )
Tooth Paste ( டூத் பேஸ்ட் )
Soap ( சோப்பு )
Hair Oil ( ஹேர் ஆயில் )
Hair Brush ( சீப்பு )
Towel ( துண்டு )
Dresses & Interview Format Dresses ( இண்டர்வீயூ டிரஸ்கள் )
Shoes & Chappal & Socks ( ஷூஸ் , காலணிகள், சாக்ஸ் )
Washing Powder ( துணி துவைக்கும் பொடி )
Perfume ( வாசனை திரவியம் )
Hair Drimmer ( முடி திருத்தும் கருவி )
Nail Cutter ( நிக வெட்டி )
Belt ( பெல்ட் )
Wearing Glass ( கண் கண்ணாடி )
Cellphone Charger ( செல்போன் சார்ஜர் )
Books ( துறைசார்ந்த புத்தகங்கள் )
NoteBook & Pen ( ஏ4 காகிதம் & பேனா & குறிப்பேடு )
Water Bottle ( தண்ணீர் பாட்டில் )
Mobile Phone ( ஸ்மார்ட் போன் )
Laptop ( மடிக்கணினி )
வேலை ( Job ) :
குறிப்பு: வேலை தேடி ஒரு நிறுவனத்திற்க்கு செல்லும் முன் கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கொண்டு செல்லவும்.
Resume ( 25 Set )
Passport Size Photo ( 25 Set )
Original Certificates & Govt Proofs & Xerox
Laptop ( Work or Project Samples )
சில பயனுள்ள மொபைல் ஆஃப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்:
இணையம் இல்லாமல் மேப்ஸ் ( Offline Map For Dubai ) 2GIS:
Download Link:
கூகிள் மொழி பெயர்ப்பான்: ( Google Translate ) :
Download Link:
இதில் சில விடுபட்டு இருக்கலாம். மேலும் உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யவும். அல்லது என்னுடைய ஈமெயில் ஐடிக்கு
( jai12240@gmail.com ) அனுப்பி வைக்கவும்.
நம்பிக்கையுடன் செல்லுங்கள் !! வெற்றி நிச்சயம் !!
அன்புடன்: டெக் ஜைனுல்.
Follow Us On: <எங்களைப் பின்தொடரவும்.>❤️Facebook Page: https://www.facebook.com/techjainul/❤️Telegram Group: https://t.me/joinchat/AAAAAFTqDO2RWTZZgJkv2Q
❤️Twitter: https://twitter.com/TechJainul
|


0 Comments