அறிவியல் இதழ்கள் இரண்டு - இத படிங்க.

நாட்டிலஸ்:

‘அறிவியல், பண்பாடு, தத்துவம் ‘ஆகிய மூன்று துறைகள் இணைந்த கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அச்சு - இணைய இதழ் ‘நாட்டிலஸ்’
( Nautilus - Science Connected ). ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு தலைப்பு சார்ந்த கட்டுரைகளை வியாழக்கிழமைதோறும் அதன் இணையதளத்தில் வெளியிடும் நாட்டிலஸில் உலகின் முன்னணி அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஆகியோர் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். காலம், வளிமண்டலம், மொழி, எல்லைகள், தேடல்கள் உள்ளிட்ட தலைப்புகளில் இதுவரை இதழ்கள் வெளியாகியுள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு 6 அச்சு இதழ்களையும் நாட்டிலஸ் வெளியிடுகிறது.


குவாண்டா மேகஸின்:


இயற்பியல், கணிதவியல், உயிரியல், கணினி அறிவியல், சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டுவரும் இணைய அறிவியல் இதழ் குவாண்டா மேகஸின் ( Quanta Magazine - Illuminatting Science). அறிவியல் குறித்த பொது மக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் சைமன்ஸ் பவுண்டேஷன் அமைப்பால் அக்டோபர் 2012-ல் இது தொடங்கப்பட்டது. இதில் வெளியாகும் கட்டுரைகள் சயின்டிபிக் அமெரிக்கன், வயர்டு, தி அட்லண்டிக், தி வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் மறுபதிப்பு செய்யப்படுகின்றன. மேலும் ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சீனம், இத்தாலியன், ஜாப்பனீஸ், போலிஷ், ஆகிய மொழிகளிலும் குவாண்டா-வில் வெளியாகும் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின்றன.







அன்புடன்:  டெக் ஜைனுல்.

Follow Us On: <எங்களைப் பின்தொடரவும்.>



❤️Facebook Page: https://www.facebook.com/techjainul/ 


❤️Telegram Group: https://t.me/joinchat/AAAAAFTqDO2RWTZZgJkv2Q